Friday, January 4, 2008

அன்பு: ஆற்றல்: அழிவு,இனிய தமிழ் பெரியவர்களுக்கும் , அன்பர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும், இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.ஒவ்வொரு வருடமும் எண்ணிக்கையில் கூடுதலாக ஒன்று சேர்ந்து கொண்டே இருக்கிறது. நமது நாட்களும் , கடந்து கொண்டே போகிறது. வரும் நாட்களும் சரி , வருடங்களும் சரி , மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஒரே குறிக்கோள் சம்பாதிப்பதும், குடும்பத்துடன் நலமாக வாழ்வது. இது தான் சராசரி மனிதர்களின் எண்ணப்போக்கு இதில் அனைவரும் எதிர்பார்ப்பது இந்த வருடம் நமக்கு சரியாக அமையவில்லை இனிவரும்வருடமாவது நமக்கு நல்லதை தருமா?? இதற்க்கு சிலர் செய்யும் காரியங்கள் வியப்பையும் ஆச்சர்யத்தையும் தரும் ,சிலர் செய்வது என்னடா இப்படியும் செய்வார்களா என்று எண்ணத்தூண்டும். ஆனால் அனைவருக்கும் ஒரே எண்ணம் தான் (இதில் சிலர் விதிவிலக்கு). ஆனால் வள்ளுவர் தாத்தா 2000 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்க்கை வாழ பல நல்ல நெறிமுறைகளை வகுத்துள்ளார். அவற்றின் படி வாழ்ந்தால் வரும் வருடம் என்று மட்டுமல்ல வாழ்வின் அனைத்து நாட்களும் நாம் பிறருக்கும் தீதின்றி, நாம் நமது வாழ்க்கையை இனிதே கொண்டு செல்லலாம்.இரண்டு முக்கியமான வினைகள் ( அன்பு ஆற்றல்) மனிதனின் வாழ்க்கையை நிர்னயிக்கிறது. இந்த இரண்டும் இருக்கும் போது நமக்கு கிடைக்கும் செல்வம் நல்வழியில் பயன்பட வழிவகுக்கிறது.ஆனால் இந்த இரண்டும் தீமையான வழியில் செல்லுமானால் அதனால் தனிமனிதாவாழ்விற்க்கு எந்த அளவிற்க்கு துன்பத்தையும் இழிப்பெயரையும் தருமென்பதையும் சமீபத்தில் நடந்த ஒரு உன்மை நிகழ்வை ( அழிவு) உதாரனத்தை கொடுத்துள்ளேன்.அன்பு :- ‍ இது ம‌னித‌குல‌த்திற்க்கு ம‌ட்டும‌ல்ல‌ உல‌கில் உள்ள‌ அனைத்து உயிரின‌ங்க‌ளுக்கும் உள்ள‌ ஒரு உண்ண‌த‌மான‌ உன‌ர்வு. பிற‌ரிட‌ம் அன்பு காட்டும் போது நாம் உணர‌ப‌டுகிறோம். கான்பூஸிய‌ஸ் சொன்ன‌து. நிஜ‌ம் தான் நான் என்று நிற்க்கும் வ‌ரை நீதான் , நாம் என்று நிற்க்கும் போது அது ந‌ம‌க்கு ஒரு உன்ன‌த‌ உற‌வுக‌ளை த‌ந்துவிட்டு சென்று விடும். பேர‌றிஞ‌ர் அண்ணாஅவ‌ர்க‌ள் இந்த‌ வார்த்தையை சொல்லும் போது நான் என்றால் உன‌து உத‌டுக‌ள் ஒட்டாது , ஆனால் நாம் என்று சொல்லும் போது உன‌து உத‌டுக‌ள் ஒட்டிக்கொள்ளும். அன்பை நான் எப்ப‌டி பிரிக்க‌ தாய் தந்தை த‌ன‌து ம‌க‌ன் மீது காட்டும் அன்பு அந்த‌ ம‌க‌னை ஒரு உண்ண‌த‌ ம‌னிதாக‌ உல‌கிற்க்கு கொண்டு வ‌ருகிற‌து . காந்திய‌டிக‌ள், ச‌த்திர‌ப‌தி சிவாஜி, ஆசான் காட்டும் ப‌ரிவில் உல‌கை வென்றுவிட‌க்கூடிய‌ ஆற்ற‌ல் வ‌ந்து விடுகிர‌து. அல‌க்ஸாண்ட‌ர், நேப்பொலிய‌ன், வின்ஸ‌ட் சார்ல‌ஸ், உறவுக‌ள் காட்டும் பாச‌த்தில் பேர‌றிஞனாக‌ உல‌கிற்க்கு அப்துல் க‌லாம் அவ‌ர்க‌ள் கிடைத்தார்.ந‌ட்பிற்க்கு இல‌க்க‌ன‌ம் சொல்வ‌தென்றால் , அறிஞ‌ர் அண்ணா , த‌ந்தை பெரியார், முனைவ‌ர் திரு மூ. க‌ருனாநீதி, போன்றோர்க‌ளை சொல்லாம். இங்கு சொல்ல‌ப‌ட்ட‌ அனைத்து உதார‌ன‌ங்க‌ளும் ஒரு வேரில் இருந்து வ‌ந்த‌வை அந்த‌ வேர் தான் அன்பு.இத்த‌னைபேர்க‌ள் இருப்பின் ந‌ம‌க்கு துனையான‌ ம‌னைவி , காத‌லி , தோழிக‌ளை ஒன்றுமில்லாத‌வ‌ர்க‌ள் என்று சொல்ல‌ முடியுமா. இன‌க்க‌வ‌ர்ச்சி என்ப‌து உல‌கில் ச‌ந்த‌திக‌ள் த‌ழைக்க‌ இன‌ம் வ‌ள‌ர‌ இய‌ற்க்கை த‌ந்த‌ உன்ன‌த‌ சோத‌னைக்கூட‌ம் என்று கூட‌ சொல்லாம். ஆம் ஆண் பெண் என்ற‌ வேற்றுமையில் ஒற்றுமை பாகுபாடு ம‌ற்ற‌ உயிரின‌ங்க‌ளுக்கேல்லாம் இன‌க்க‌வ‌ர்ச்சி என்று சொன்னாலும் , ம‌னித‌னை பொருத்த‌ வ‌ரை அது உய‌ர் நிலைக்கும் கொண்டு செல்லும் ம‌ன‌வுறுதிய‌ற்ற‌ ம‌னித‌ர்க‌ளால் சில‌ர‌து வாழ்க்கைபாதாளத்திற்க்கும் கொண்டு சென்று விடும். ஒரு உண்மை உதார‌ண‌ம் : மும்தாஜ் பேக‌ம் காத‌ல் ம‌னைவி போருக்கு சென்றால் கூட‌வே அழைத்து செல்வான், ஷாஜகான் என்னும் முக‌லாய‌ ம‌ன்ன‌ன். அன்று க‌ன்ன‌னுக்கு பாமா அவ‌ர்க‌ள் போர் கால‌ங்க‌ளில் தேரோட்டியாக‌ இருந்தார் என்று நாம் க‌தைக‌ளில் ப‌டித்திருப்போம் ஆனால் முக‌லாய‌ ம‌ன்ன‌ர்க‌ளின் அந்த‌புர‌ங்க‌ளில் ப‌ல‌ அழ‌கு மாந்தர்க‌ள் ம‌ன்ன‌ருக்கு சேவை செய்ய‌ காத்திருக்கும்போது ஷாஜ‌கான் த‌ன‌து ம‌னைவி மும்தாஜின் மீது அள‌வு க‌ட‌ந்த‌ காத‌ல் இருந்த‌து. அவ‌ன் ப‌ல‌முறை என‌க்கு அல்லா இந்த‌ பிற‌ப்பில் த‌ந்த‌ உன்ன‌த‌ ப‌ரிசு மும்தாஜ் பேக‌ம் என‌ சொல்வ‌துண்டு. அந்த‌ அள‌விற்க்கு அந்த‌ ம‌ன்ன‌னுக்கு மும்தாஜ் பேக‌த்தின் மீது காத‌ல்.ஆனால் அவ‌ர‌து எட்டாவ‌து குழ‌ந்தை பிற‌ந்த‌ உட‌ன் மும்தாஜின் உட‌ல் நல‌ம் பாதிக்க‌ப்ப‌ட‌ போழுது அன்றைய‌ ஹ‌ஜீன்க‌ட் கோட்டை ர‌ஜ‌புத்திர‌ர்க‌ளிட‌மிருந்து மீட்ட‌ ச‌ந்தோச‌த்தில் இருந்த‌ ஷாஜ‌கானுக்கு இந்த‌ செய்தி ஒரு பேரிடி, உட‌னே டில்லி நோக்கி புற‌ப‌ட்டான். டில்லி வ‌ந்த‌தும் த‌ன‌து வாரிசை த‌ந்துவிட்டு உட‌ல்த‌ள‌ர்ந்து ப‌டுக்கையில் கிட‌ந்த‌ மும்தாஜை காண்கிறான்.ஒரு ச‌க்ர‌வ‌ர்த்தி , குழ‌ந்தை போல் உட‌ல் குலுங்கி அழ‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் மும்தாஜ் காலை வ‌ரை கூட‌ உயிர் வாழ்வ‌து க‌டின‌ம் என்று சொல்லிவிட‌ க‌ல‌ங்கி போனான். அன்று வெள்ளிக்கிழ‌மை மாலை வேளை தொழுகைமுடித்த‌ பிற‌கு மும்தாஜ் த‌ன‌து க‌ண‌வ‌னிட‌ம் அல்லாவின் விருப்ப‌ம் நான் உங்க‌ளை விட்டு பிரிய‌ வேண்டும் என்ப‌து போல் இருக்கிற‌து , ஆனால் நான் உட‌லுட‌ன் இல்லாவிட்டாலும் என் நினைவுக‌ள் மூல‌மாக‌ உங்க‌ளுட‌ன் உயிர் வாழ்வேன் என‌ சொல்லிக்கொண்டிருக்கும் போது அஜான் ஓதும் ஓசை கேட்க‌ மும்தாஜின் வார்த்தை அதோ அல்லா என‌க்கு அழைப்புவிடுத்துவிட்டார் என‌ சொல்லி த‌ன‌து க‌டைசி சுவாச‌த்தை காற்றில் க‌ல‌க்க‌விட்டு , உயிர‌ற்ற‌ உட‌ல‌மாக‌ ஷாஜ‌கானின் ம‌டியிலேயே த‌ளர்ந்து விட்டால். மும்தாஜ் பேக‌த்தின் பிரிவால் இர‌ண்டே நாட்க‌ளில் ம‌ன்ன‌ரின் முடிக‌ள் வெளுத்து விட்டாதாக‌ சொல்வார்க‌ள் , அப்ப‌டியென்றால் அவ‌ர் எந்த‌ அள‌வு மும்தாஜ் மீது அவ‌ர் அன்பு வைத்திருந்தார் என்று புரியும். ஆர‌ம்ப‌த்தில் ம‌ன‌ம் நொருங்கி போயிருந்த‌ ஷாஜ‌கான் ம‌ன‌தை திட‌ப‌டுத்தி கொண்டார். ந‌ம்மை விட்டு உட‌லால்தான் பிரிந்தாள் ஆனால் உண‌ர்வால் ந‌ம்முட‌ன் தானே வாழ்கிறாள் அவ‌ளுக்காக‌ நான் என்ன‌ செய்ய‌ என்று யோசித்தார் ம‌ன்ன‌ன். அவ‌ளுக்காக‌ ஒன்று செய்ய‌ வேண்டும் அது உல‌க‌ம் இருக்கும் வ‌ரை அவ‌ள் பெய‌ரை சொல்ல‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் எழ‌ ஷாஜகான் க‌ண்ட‌து மும்தாஜ் ம‌க‌ல் (தாஜ்மஹால்) ஒருவ‌ன் ம‌னித‌ன் த‌ன‌து ம‌னைவியின் மீது வைத்திருந்த‌ காத‌லும் அந்த‌ காத‌லுக்கு அவ‌ரின் ம‌னைவி கொடுத்த‌ ம‌ரியாதையையும் உல‌க‌ம் உள்ள‌ வ‌ரை சாட்சியாக‌ இருக்கும் நினைவு சின்ன‌ம். ஜ‌ஹாங்கீர் கோட்டையில் புதைத்து வைத்ததிருந்த‌ மும்தாஜின் உட‌ல‌த்தை தாஜ்மஹால் க‌ட்டி முடிக்க‌ ப‌ட்ட‌வுட‌ன் அந்த‌ ம‌க‌ல் அவ‌ளுக்கு ம‌ட்டும் தான் சொந்தம் என‌ சொல்லி அவ‌ள‌து உட‌ல‌த்தை தாஜ்ம‌க‌லில் மீண்டும் புதைத்தார்.இது அன்பின் ச‌க்திக்கு எடுத்துகாட்டு. காத‌லியின் பிரிவால் துவ‌ண்டு போனாலும் அவ‌ளின் நினைவு அவ‌ள் த‌ன்னுட‌ன் வாழ்ந்த‌ கால‌த்தில் த‌ன‌மீது காட்டிய‌ அன்பால் தானே இன்றும் நாம் தாஜ்ம‌க‌ல் என்னும் உல‌க‌ அதிச‌ய‌த்தை கான்கிறோம். நான் க‌ட‌ந்த‌ 2000 ஆண்டு ஆக‌ஸ்டு மாத‌த்தில் தாஜ்ம‌க‌லை பார்க்க‌ என‌து ந‌ன்ப‌ர்க‌ளுட‌ன் சென்றிருந்தேன். அந்த‌ முக்கிய‌ க‌த‌வின் வாச‌லில்இருந்து பார்க்கும் போது கிட்ட‌த‌ட்ட‌ அரைகிலோமீட்ட‌ர் தூர‌த்தில் அந்த‌ வ‌ட‌ இந்திய‌ க‌டும் வெயிலில் த‌க‌த‌க‌க்கும் தாஜ்ம‌க‌லை காண்டேன். அது வார்த்தைக‌ளால் சொல்ல‌க்கூடிய‌ உண‌ர்வுக‌ள‌ல்ல‌ காத‌லுக்கு இவ்வ‌ள‌வு ச‌க்தியா இவ‌னைவிட எவ்வ‌ளவோ பெரிய‌ மாம‌ன்ன‌ர்க‌ள் , குபேர‌னைவிட‌ அதிக‌ செலவ‌ம் ப‌டைத்த‌ பெரும் ப‌ண‌க்கார‌ர்க‌ள் அவ‌னுக்கும் முன்பும் பின்ன‌ரும்வாழ்ந்து ம‌றைந்த‌ன‌ர். அவ‌ர்க‌ளால் ஏன் இது போன்ற‌ ஒன்றை ப‌டைக்க‌ முடிய‌வில்லை. இது என்ன‌ ஷாஜ‌கானின் ப‌யித்திய‌கார‌த‌ன‌மா என்று கூட‌ நினைக்க‌த்தூண்டும். இந்த‌ இட‌த்தில் அன்பு இல்லாவிட்டால் இன்று உல‌க‌ வ‌ரைப‌ட‌த்தில் ஆக்ரா ஏதோ ஒரு இந்திய‌ ந‌க‌ர‌மாகி இருக்கும். ஆற்ற‌ல்: - ம‌னித‌ன் இன்று ப‌ல‌ துறைக‌ளில் சிற‌ந்து விள‌ங்கி இருக்க‌ கார‌ன‌ம் ம‌னித‌ குல‌த்தில் ந‌ன்மைக்கு ப‌ல‌ ஆய்வுக‌ளை மேற்க்கொண்டு ப‌ல‌ வ‌ச‌திகளை த‌ன‌து இன‌த்திற்க்கு பெற்று த‌ந்து கொண்டிருக்கிறான். இது அனைத்திற்க்கும் ம‌னித‌னுக்கு தேவை ஆற்ற‌ல் (அறிவு) இது இல்லை என்றால் ம‌னித‌ன் வில‌ங்குதான். நாம் வாழ்வும் இந்த‌ ம‌ண் , வின்னிலிருந்து பார்க்கும் பொழுது ஒரு அணுத்துக‌ள் தான் அப்ப‌டி யெனில் ந‌ம‌க்கு மேல் இருக்கும் ச‌க்திக‌ள், என்ன‌ என்ன‌ என்ப‌து க‌லிலியோ கால‌த்திற்க்கும் அத‌ற்க்கும் முன்தைய‌ கால‌த்திலும் ச‌ரி , ம‌னித‌ன் நாக‌ரீக‌ம‌டைந்த‌ கால‌த்திலிருந்தே விண்ணை க‌ண்ணால் பார்த்து விய‌ந்து வ‌ந்தான். இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌த்தை ப‌ற்றி ஆராய‌ ஆற்ற‌ல் மிக்க‌ப‌ல‌ விஞ்ஞாணிக‌ள் இருந்தும், உட‌ல் முற்றிலும் த‌ளர்ந்து ந‌ட‌க்க‌ முடியாம‌ல், பேச‌முடியாம‌ல், ஏன் கை கால்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ உட‌லின் ஒரு பாக‌த்தைக்கூட‌ அசைக்க‌ முடியாம‌ல் இருந்தும் இன்று உல‌கில் பிர‌ப‌ஞ்ச‌விய‌ல் விஞ்ஞானிக‌ளில் முக்கியமான‌ ஒருவ‌ராக‌ திக‌ழும் ஸ்டீபென் ஹாக்கிங் அவ‌ர்கள் ஆற்ற‌ல் தான் அவ‌ரை இந்த‌ அள‌விற்க்கு கொண்டு வ‌ந்திருக்கிரது என்றால் அதுமிகையாகாது. இங்கும் அவ‌ருட‌ன் இருந்து அவ‌ருக்கு உறுதுனையாக‌ இருந்த‌ அவ‌ரது ம‌னைவியின் ப‌ங்கும் போற்றுத‌லுக்குறியது. காலிலியோ இறந்து துள்ளியமாக 300 ஆண்டுகளுக்குப் பிறகு , இங்கிலாந்தில் ஸ்டீபென் ஹாக்கிங் **** 1942 ஜனவரி 8 ஆம் தேதி ஆக்ஸ்போர்டு நகரில் பிறந்தார். மருத்துவ டாக்டரான தந்தை பிராங்க் ஹாக்கிங், தேசிய மருத்துவ ஆய்வுக் கூடத்தில் [National Institute for Medical Research] வேனில் நாட்டு நோய்களில் [Tropical Diseases] சிறப்பாக ஆராய்ச்சி செய்து வந்த உயிரியல் விஞ்ஞானி [Research Biologist]. தாயார் இஸபெல் ஹாக்கிங், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வேதாந்தம், அரசியல், நிதித்துறை பற்றிப் படித்தவர். அவர்களது நான்கு குழந்தைகளில் ஸ்டீபென்தான் மூத்த பையன். அவன் பிறந்த சமயம்தான் இரண்டாம் உலகப் போர் துவங்கி , ஜெர்மன் கட்டளை ராக்கெட்டுகள் அடிக்கடி ஏவப்பட்டுக் குண்டுகள் விழுந்து , பிரிட்டனில் பல நகரங்கள் தகர்க்கப் பட்டன! சிறுவனாக உள்ள போதே ஸ்டீபென் பௌதிகத்திலும் , கணிதத்திலும் மித மிஞ்சிய சாமர்த்தசாலி யாக இருந்தான்! ஹைகேட் [Highgate] ஆரம்பப் பள்ளியில் படித்தபின், ஸ்டீபென் பிறகு புனித ஆல்பன்ஸ் [St. Albans] உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தான். 1958 இல் மேற்படிப்பிற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். தந்தையார் மருத்துவம் எடுக்கத் தூண்டியும் கேளாது, ஸ்டீ•பென் கணிதம் , பௌதிகம் இரண்டையும்விரும்பி எடுத்துக் கொண்டார்! அங்கே அவர் வெப்பயியக்கவியல், ஒப்பியல் நியதி, கதிர்த்துகள் யந்திரவியல் [Thermodynamics, Relativity Theory, Quantum Mechanics] ஆகிய பகுதிகளைச் சிறப்பாகப் படித்தார். 1961 இல் ராயல் விண்ணோக்கிக் கூடத்தில் [Royal Observatory] சேர்ந்து, தன் சிறப்புப் பாடங்களின் வேட்கையில் சில மாதங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1962 இல் ஆக்ஸ்போர்டு கல்லூரியில் B.A. பௌதிகப் பட்டதாரி ஆகி , அடுத்துக்கேம்பிரிட்ஜ் சென்று பொது ஒப்பியல் , அகிலவியல் துறைகளில் [ General Relativity, Cosmology] ஆராய்ச்சி செய்யப் புகுந்தார். கேம்பிரிட்ஜில் முதற் துவக்க காலவரைப் படிப்பு [ First Term] முடிந்த பின் மிகவும் சோர்ந்து நொய்ந்து போன ஸ்டீ• பெனைக் கண்ட தாய், டாக்டரைப் பார்க்கும்படி மகனை வற்புறுத்தினார். இரண்டு வார உடம்பு சோதனைக்குப் பின், அவருக்கு ALS என்னும் [Amyotropic Lateral Sclerosis] ஒருவித நரம்புத் தசை நோய் [Neuro-muscular Disease (Motor Neurone Disease)] உள்ளதாக, டாக்டர்கள் கண்டு பிடித்தார்கள்! அமெரிக்காவில் அந்நோயை " லோ கேரிக் நோய்" [Lou Gehrig's Disease]என்று குறிப்பிடுகிறார்கள்! அந்நோய் மூளை, முதுகுத் தண்டு [Spinal Cord] ஆகியவற்றில் சுயத்தசை இயக்கத்தை ஆட்சி செய்யும் நரம்புச் செல்களைச் [Nerve Cells] சிதைத்து விடும்! ஆனால் மூளையின் அறிவாற்றலைச் சிறிதும் பாதிக்காது! அடுத்து நோயாளிக்குச் சுவாசிக்கும் தசைகள் சீர்கேடாகி மூச்சடைத்தோ அல்லது நிமோனியா தாக்கியோ சீக்கிரம் மரணம் உண்டாகும்! திடீரென அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி,டாக்டர்கள் அவர் Ph.D. பட்டம் வாங்குவது வரை கூட வாழ மாட்டார் என்று முன்னறிவித்தார்கள்! அதைக் கேட்ட ஸ்டீ• பென் ஹாக்கிங் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தாலும், பௌதிக ஆராய்ச்சி செய்யும் போது மன உறுதியும், உடல் வலிவும் பெற்று பிரபஞ்ச விரிவு ஆய்வுகளில் முன்னேறிக் கொண்டு வந்தார்! மாதர் குல மாணிக்கமான மனைவி ஜேன் ஹாக்கிங்! வாழ்க்கையில் நொந்து போன ஹாக்கிங் , 1965 இல் ஜேன் ஒயில்டு [ Jane Wilde] என்னும் மாதைத் திருமணம் செய்து கொண்டார். மனைவி ஜேன் ஹாக்கிங் மாதருள் ஒரு மாணிக்கம்! மில்லியனில் ஒருத்தி அவள்! அவரது கடும் நோயைப் பற்றி அறிந்த பின்னும், அவர் நீண்ட காலம் உயிர் வாழமாட்டார் என்று தெரிந்த பின்னும், மன உறுதியோடு ஸ்டீ• பெனை மணந்து கொண்டது, மாந்தர் வியப்படையச் செய்யும் மனச்செயலே! ஹாக்கிங் கசந்தபோன வாழ்வை வசந்த வாழ்வாய் மாற்றி, மாபெரும் விஞ்ஞானச் சாதனைகள் புரிய வசதி செய்த வனிதாமணி, ஜேன் ஹாக்கிங்! 1962 இல் லோ கேரிக் நோய் [Lou Gehrig's disease] வாய்ப்பட்டதும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஸ்டீ• பென் ஆயுள் முடிந்துவிடும் என்று டாக்டர்கள் கணக்கிட்டார்கள்! ஆனால் நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு மேற்கொண்டும் [2007] அவரது ஆயுள் இன்னும்நீண்டு கொண்டே போகிறது! அவர்களுக்கு இரண்டு புதல்வர்களும், ஒரு புதல்வியும் உள்ளார்கள்! துரதிர்ஷ்ட வசமாக நகர்ச்சி நரம்பு நோயில் [ Motor Neurons Disease] துன்புறும் ஸ்டீ• பென், முழுவதும் நடக்க முடியாது முடமாகிப் போய் , பேச்சுத் தடுமாறி உருளை நாற்காலியில் , வீல்சேர் விஞ்ஞானியாய் உலவிச் செல்லும் நிலைமை ஏற்பட்டு விட்டது! மற்றும் சில முறைகளில் அவருக்கு யோகமும் இருந்தது! அவரது மனைவி ஜேன் ஹாக்கிங், [Jane Hawking] புதல்வர், புதல்வி அளிக்கும் உதவி , ஆதரவு ஸ்டீ •பெனுக்கு விஞ்ஞானப்பணிகளில் வெற்றியும் , சுமுகமான வாழ்க்கையும் பெற ஏதுவாக இருந்தது! அவரது விஞ்ஞானக் கூட்டாளிகளான ராஜர் பென்ரோஸ் [Roger Penrose], ராபர்ட் ஜெரோச் [Robert Grouch], பிரான்டன் கார்டர் [Brandon Carter], ஜார்ஜ் எல்லிஸ் [George Ellis] ஆகியோர் ஆராய்ச்சியிலும், பௌதிகப் பணியிலும் அவருக்குப் பேராதரவாகவும், பெருந்துணைவராகவும் அருகே இருந்தனர்!1985 இல் "காலத்தின் ஒரு சுருக்க வரலாறு " [A Brief History of Time] என்னும் அவரது நூலின் முதற்படி எழுத்தாக்கம் [Draft] முடிந்தது. ஜெனிவாவுக்குச் சென்று செர்ன் பரமாணு விரைவாக்கியில் [CERN Particle Accelerator] ஆராய்ச்சிக்காகத் தங்கிய போது, நிமோனியா நோய் வாய்ப்பட்டு மருத்துவக் கூடத்திற்குத் தூக்கிச் செல்லப் பட்டார். உயிர்த்துணைச் சாதனத்தை [Life Support System] அவருக்கு இணைத்திருப்பதில் எதுவும் பயனில்லை என்று டாக்டர்கள் கூற, மனைவி ஜேன் ஹாக்கிங் கேளாமல்,அவரைக் கேம்பிரிட்ஜ் மருத்துவக் கூடத்திற்கு விமானத்தில் கொண்டு வந்தார்! அங்கே தொண்டைக் குழாய் அறுவை [Tracheotomy Operation] அவருக்குச் செய்ய நேரிட்டது. என்ன ஆச்சரியம்! அறுவை வெற்றியாகி ஸ்டீ• பென் உயிர் பிழைத்துக் கொண்டார்! ஆனால் அவரது குரல் முற்றிலும் அறுந்து போய்விட்டது! அதன்பின் அவர் பிறரிடம் எந்த விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது! அப்போது அவரது மாணவருள் ஒருவரான பிரையன் விட் [ Brian Whitt] என்பவர் நூலை எழுதி முடிக்க உதவியதோடுப் பிறரிடம் தொடர்பு கொள்ள " வாழ்வியக்க மையம்" [Living Center] என்னும் தொடர்புக் கணினிப் படைப்பு [Communication Program] ஒன்றை ஸ்டீ•பெனுக்கு அமைத்துக் கொடுத்தார். " வாழ்வியக்க மையம்" ஸன்னிவேல் கலி• போர்னியாவில் உள்ள வால்ட் வால்டாஸ் [Walt Woltosz of Words Plus Inc. & Speech Plus Inc. Sunnyvale, California] அவரின் அன்பளிப்பு! அதைப் பயன்படுத்தி ஸ்டீ•பென் கட்டுரை எழுதலாம்; புத்தகம் தயாரிக்கலாம்; அதில் உள்ள பேச்சு இணைப்பியின் [Speech Synthesizers] மூலம் ஸ்டீ•பென் பிறருடன் பேசலாம்! டேவிட் மேஸன் [David Meson] என்பவர் பேச்சு இணைப்பி, மின்கணனி இரண்டையும் அவரது உருளை நாற்காலியில் வசதியாகப் பிணைத்து வைத்தார். இப்போது ஸ்டீ• பென் மின்னியல் குரலில் [Electronic Voice], முன்னை விடத் தெளிவாக இஇவற்றில் மூலம் எழுதவும், பேசவும் முடிகிறது! ஆற்ற‌லின் திறமைக்கு இவ‌ரி பெய‌ர் சொல்வ‌து பொருத்தமாக‌ இருக்கும். அழிவு: இது இந்த‌ நேர‌த்தில் அந்த‌ வார்த்தை ப‌ய‌ன் ப‌டுத்த‌ கூடாது. இருப்பினும் அதிக‌மாக செல்லாம‌ல் மேலோட்ட‌மாக‌ சொல்லிவிடுகிறேன். தந்தை அர‌சிய‌லில் சேர்த்த‌ ப‌ண‌ம் செல்வ‌த்திற்க்கு ப‌ஞ்ச‌மில்லை , இருப்பினும் இன்று வாழ்க்கையை தொலைத்துவிட்டு நாட‌க‌ போர்வைக்குள் ப‌ந்தாவாக‌ உல‌வும் ஒரு வி ஐ பி ராகுல் மாஹாஜ‌ன். ஆம் ம‌றைந்த‌ முன்னாள் ம‌த்திய‌ அமைச்ச‌ர் ஒரு பிர‌ப‌ல‌ தேசிய‌ க‌ட்சியின் முக்கிய‌ த‌லைவ‌ர்கூட‌அவர்தான் பிரமோத் மஹாஜன் , ச‌விதா கோய‌ல் நான் 2000 ம‌ற்றும் 2001 02 க‌ளில் ச‌யானில் உள்ள‌ ஒரு ஆத‌வ‌ற்ற‌ குழ‌ந்தைக‌ள் காப்ப‌க‌த்தில் ஓய்வு நேர‌ங்க‌ளை அந்த‌ குழ‌ந்தைக‌ளுட‌ன் செல‌விடும் போது அங்கு அடிக்க‌டி வ‌ந்து செல்லும் ஒரு ந‌ல்ல‌ பெண்ம‌ணி , முத‌லில் அவ‌ர்க‌ளை ப‌ற்றி என‌க்கு அவ்வ‌ள‌வாக‌ தெரியாது. பிற‌குதான் அவ‌ர்க‌ள் விமான‌ பைல‌ட் என்றும் அவ‌ர் பிர‌ப‌ல‌ அர‌சிய‌ல்வாதி ம‌க‌ன் ராகுல் மகாஜ‌னின்காத‌லி என்றும். 2002 ஆம் ஆண்டில் அந்த‌ குழ‌ந்தைக‌ள் அனைவ‌ரும் மும்பையிலிருந்து பூனா இல‌வ‌ச‌ விமான‌ ப‌ய‌த்திற்க்கு ஏற்ப்பாடு செய்த‌வ‌ர்க‌ளில் இவ‌ரும் ஒருவ‌ர். ராகுல் மகாஜ‌னின் த‌ந்தை இற‌ந்து 1 மாத‌த்திற்க்குள் டில்லியில் த‌னது தந்தையில் அர‌சு வீட்டில் போதைப்பொருள் ப‌ய‌ன்ப‌டுத்தி பிர‌மோத்ம‌காஜ‌னின் உத‌வியாள‌ர் ம‌ர‌ன‌ம‌டைய‌ இவ‌ரோ உயிர் பிழைத்துக்கொள்ள‌ , போதைபொருள் ப‌ய‌ன்ப‌டுத்திய‌து தொட‌ர்பாக‌ இவ‌ரின் மீது வ‌ழ‌க்கு தொட‌ர்ந்து சிறைசொல்ல‌ ஆனால் அர‌சிய‌ல் வாதியின் வாரிசு சில‌ நாட்க‌ளிலேயே விடுத‌லை அடைய , த‌ந்தைகொலை , போதைவ‌ழ‌க்கு , என்று அவ‌ர் குடும்ப‌ம் த‌டுமாறும் நேர‌த்தில் அவ‌ருக்கும் ம‌னைவியாக‌ ச‌விதா கோய‌ல் அவ‌ர்க‌ள் ம‌ண‌முடித்து அவ‌ரின் இந்த‌ இக்க‌ட்டான‌ த‌ருன‌ங்க‌ளில் அவ‌ருக்கு உறுதுனையாக‌ இருக்க‌ சென்றார். ஆனால் ந‌ட‌ந்த‌து என்ன‌ திரும‌ண‌ம் முடிந்து சில‌ மாத‌ங்க‌ளுக்குள்ளாக‌வே த‌ன‌து ம‌னைவியை தாக்க‌ அவ‌ர்க‌ள் உட‌ல் நல‌ம் பாதிக்க‌ப‌ட்டு மீன்டும் த‌ன‌து த‌ந்தை வீட்டிற்க்கே(டில்லி ) சென்று விட்டார். அவ‌ர் ஒன்று ப‌ண‌த்திற்க்காக‌ ராகுலை திரும‌ண‌ம் செய்த‌வ‌ரில்லை , இராகுல் மகாஜ‌னின் த‌ந்தை பிர‌மோத் ம‌காஜ‌ன் அவ‌ர்க‌ள் அர‌சிய‌லுக்கு வ‌ந்த‌ பிற‌கு ப‌ண‌ம்பார்த்த‌வ‌ர் , ஆனால் ச‌விதா கோய‌ல் அவ‌ர்க‌ளோ ப‌ர‌ம்ப‌ரை ப‌ண‌க்கார‌ர் ஹ‌ரியானா மாநில‌த்தில் ஹிஸ்ஸார் என்னும் ந‌க‌ர‌த்தில் ப‌ல‌ ஏக்க‌ர் நில‌ங்க‌ள் அவ‌ர்க‌ளின் குடும்ப‌த்திற்க்கு சொந்த‌மான‌து. அதில் ப‌ல‌ தொழிற்ச்சாலைக‌ள் , விவ‌சாய‌ நில‌ங்க‌ள் என‌ கோடிக்க‌ன‌க்கில் சொத்துக்க‌ள். ச‌விதா அவ‌ர்க‌ளில் குண‌நல‌ங்க‌ளில்லும் எந்த‌ குறையும் காண‌முடியாது. ஆத‌ர‌வ‌ற்ற் குழ‌ந்தைக‌ளுக்க‌ளின் ந‌ல‌னுக்காக‌ பாடுப‌டும் ஒரு நல்ல‌ உள்ள‌ம் . த‌ன‌து வாழ்க்கையில் சிற‌ப்பாக‌ அமைத்து கொள்ள‌ முடிய‌வில்லை என்று சொல்வ‌தைவிட‌ அவ‌ருக்கு அமைந்த‌வ‌ர் ச‌ரியில்லை என்று தான‌ சொல்ல‌ வேண்டும் ,இதில் என்ன‌ வ‌ருத்த‌ம் என்றால் ராகுலின் தாயாரும் அவ‌ர‌து ச‌கோத‌ரியும் கூட‌ சேர்ந்து ச‌விதா அவ‌ர்க‌ளை ப‌ற்றி ப‌த்திரிக்கைக‌ளுக்கு பேட்டி கொடுக்கும் போது இப்ப‌டியும் ம‌னித‌ர்க‌ளா என‌ நினைக்க‌ தூண்டுகிர‌து. குடும்ப‌ம் சிக்க‌லில் பிடியில் இருக்கும் போது சொந்த‌ அண்ன‌ன் த‌ம்பிக‌ள் கூட‌ தூர‌ப்போகும் நிலையில் உறுதியுட‌ன் இருந்து ராகுலின் க‌ர‌ம் பிடித்த‌ச‌விதாகோய‌ல் இன்று விவாக‌ர‌த்து கேட்டு டில்லி கோர்ட்டில் ம‌னுதாக்க‌ல் செய்துள்ளார். ப‌டித்திருந்தும் ப‌ண‌ ப‌ல‌மெல்லாம் இருந்தும் அன்பை புரிந்து கொள்ளாம‌ல் தான்தோறித்த‌னமாக‌ வாழும் ம‌னித‌ர்க‌ள் த‌ன‌து வாழ்வை எப்ப‌டி தொலைத்துக்கொள்கிறார்க‌ள் என்ப‌த‌ற்க்கு ராகுலைவிட‌ சிற‌ந்த‌ உதார‌ன‌ம் வேறுயாருமில்லை

No comments: