Friday, February 1, 2008

Teachers Day

ஆசிரியர் தினம்
குரு, ஆசான், ஆசிரியர், வாத்தியார், இப்படி பல அவதரங்கள் கொண்ட மொத்த உருவம் ஆசிரியர். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப்பதம் உண்டு எகா நல்லவன்= கேட்டவன் : புத்திசாலி =பைத்தியகாரன் ஆனால் ஆசான் என்ற ஒரு வார்த்தைக்கு மட்டும் இலக்கன வித்தகர்கள் எதிர்மறை வார்த்தை தரவில்லை , எப்படி தரமுடியும் இலக்கண மேதையாகிவிட்டவர்கள் கூட அவர்களுக்கு அந்த இலக்கணத்தை கற்றுதந்தவர்கள் ஆசிரியர்கள் தானே.
இன்று நான் இதை எழுத நீங்கள் படிக்க காரணம் ஆசிரியர் என்ற ஒரு ஜீவன் தானே காரணம்
சர்வ பள்ளி இராதாகிருஷ்னன் அவர்கள் இளமை பருவத்தில் வீட்டிலேயே கல்வி பயின்றார் அவரது வீட்டு பணியாளர்களுடன் அவர்களது குழந்தைகளும் பணிபுரிவதை கண்டு இவர்கள் ஏன் படிக்க வில்லை என கேள்வி எழுப்ப அதற்க்கு பதில் , இவர்களுக்கு சொல்லி கொடுக்க யாராப்பா இருக்கிறார் என்ற பதில் அந்த பதில் தான் பிற்க்காலத்தில் அவரை ஆசிரியராக பேராசிரியராகபல மேதைகளை தந்த ஒரு ஆசானாக இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் என்ற மதிப்பிற்க்கு உயர்த்தியது.
ஆசிரியர் யார் உலகிற்க்கு நன்னேறி வழங்கிய திருமறையை தந்த நபிகள் நாயகம் ஆசிரியர்தான், சகோதரத்துவத்தையும் சகிப்புதன்மையையும் உலகிற்க்கு தந்த இறைமகன் இயேசுபிரான் ஒருஆசிரியர்தான், உறவிற்க்கும் அப்பாற்பட்டது நீதி என கீதை உறைத்த கண்ணபிறானும் ஒரு ஆசிரியர்தான் அன்பையும் கருனையையும் போதித்த கௌதமன் ஒரு ஆசிரியர்தான். இவர்களின் வழிவந்தவர்கள் தான் நமது ஆசிரியர்கள் .தாய் தன் குழந்தையிடம் 60% அன்பையும் பிறகுழந்தைகளிடம் 40% அன்பையும், வழங்குவார் ஆனால் ஆசிரியர் முதலில் அமர்ந்திருக்கும் நாதனுக்கும் இடையில் அமர்ந்திருக்கும் சித்திராவிற்க்கும் கடைசியில் அமர்ந்திருக்கும் சரவனாவையும் ஒருசேர பார்ப்பவர் ஆசிரியர் மட்டும் தான். இது விவாததிற்க்கு அப்பற்பட்டது.தாயை பற்றியும் தந்தையைபற்றியும் பல பாடல்களில் கேட்டதுண்டு ஆனால் ஆசிரியரை பற்றி எந்தபாடலாவது உண்டா , பாடல் மூலம் புகழ் விரும்பா மேதைகள் அவர்கள். அவர்களை பாடல் வரிகளிலோ கவிதை துனுக்குகளிலோ அடக்கி விட முடியாத பெருமை குணம் கொண்ட மகான் நமது ஆசிரியர்கள்
ஆசிரியர்களின் கடமை உணர்விற்க்கு ஒரு உதாரனம் :எனது பள்ளிபருவ தமிழாசிரியை மணமுடிந்து பல வருடங்களாகியும் குழந்தை பேறு இல்லாமல் இருந்தவர்கள் அவர்களின் முகத்தில் எந்த ஒரு சலனமும் வகுப்பறையில் காணமுடியாது. எப்பொழுதும் போல் கலகலப்பான பேச்சு நகைச்சுவையுடன் கூடிய போதனை என ஒரு மாணவ மாணவிகளுக்காக தனது சொந்த நலனை கூட வகுப்பரைக்கு வெளியே மூட்டைகட்டி வைத்து விட்டு வரும் மாபேரும் தியாகிகள் ஆசிரியர்கள். இத்தனைக்கும் எங்கள் வகுப்பறைக்கே வந்து கூட அவர்களது மாமியார் அவருடன் வாக்குவாதாம் செய்துவிட்டு சென்றிருக்கிறார்.
சிறு வயதில் ஒரு ஆசிரியர் தினத்தன்று பல மாணவர்கள் பூங்கொத்து மற்றும் பல கண்ணாடி பொருட்கள் என வாங்கி தர வேண்டும் என பெசிக்கொண்டிருந்த போது , நானும் ஏது தரவேண்டுமே என யோசிக்கையில் எங்கள் பாட்டி எனக்காக பனங்கருப்பட்டி வாங்கி வர அதை அந்த சிறிய ஓலைபெட்டியோடு வகுப்பறைக்கு எடுத்து சென்றேன். அனைவரும் சிரித்தார்கள். கடைசிவரை எனக்கு அதை கொடுக்க தயக்கம் எல்லோரும் தமது பரிசு பொருட்களை தந்து விட தமிழன்னையும் அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டு மீண்டும் அவர்களிடமே தந்து விட்டார். நிங்க நல்ல படிச்சு பாஸ் ஆன பிறகு இதை தந்தால் போதும் என சொல்லிகெண்டிருக்கையில் எனது அருகில் உள்ள நன்பன்தமிழம்மாவிடம் சொல்லிவிட்டான். டீச்சர் சரவணனும் உங்களுக்கு ஏதோ தரவேண்டும் என சொல்கிறான் என்றான்
அவரும் நீ என்ன சரவனா கொண்டு வந்தாய் என கேட்க்க நானும் தயக்கமாய் அந்த ஓலை பெட்டியை கொடுக்க அதில் இருந்த சில்லுகருப்பட்டியின் மனம் அவரை கவர்ந்து விட்டது போலும் அனைத்து மாணவர்களுக்கும் தந்து ஒருமுறை என்னை சந்திக்க வந்த அம்மாவிடம் அந்த கருப்பட்டி கிடைத்தால் எனக்கு ஒரு கிலோ வாங்கியாங்க என சொன்னது. இன்றும் என் மனதில் சந்தோசமான தருனமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சந்தோசமான தருனங்கள் சொல்ல வேண்டுமென்றால் வாழ்க்கையில் பள்ளிபருவங்களை சொல்ல வேண்டும் .ஒரு புதிய நிகழ்ச்சி, புதியோரின் வருகை பள்ளி பருவத்தில் என்றுமே உற்ச்சாகம் தரும் , ஆனால் எங்களின் வகுப்பில் சுந்தரம் வாத்தியார் வந்தாலே எங்களுக்கு உற்ச்சாகம் தான் ஏன் தெரியுமா அவர்தான் எங்களின் ஆங்கிலம் , கனிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களை நடத்துபவர்அவர் முதல் நாள் அன்றே எங்களுக்கு சொல்லி விட்டார். நீங்கெல்லாம் "ஒன்னு சேர்ந்து பாடம்" நடத்துக சார் அப்படீன்னு சொன்னால் மட்டும் தான்பாடம் நடத்துவேன் என்றார்.
"நாங்க தமிழர்களாச்சே" அதுதான் அவர் வந்தாலே ;) ;) ;) ;)

AANNAIYUM PITHAAVUM MUNNEERI TEYVAM
AASAANA THANTHATHE ARUL MIGU VEETHAM
சர்வ பள்ளி இராதாகிருஷ்னன் அவர்கள் பெயரிலேயே " பள்ளி " இருக்கிறது ஆதலினால் சிறந்த ஆசிரியனாய் அவர் திகழந்தார்
திருமறையை தந்த நபிகள் நாயகம் அவ்ர்களே நாயகமாய் ,நடு நாயகமாய் ஆதார மூலப் பொருளாய் ஆசிரியனுமாய் இருந்திருக்கிறார்
இறைமகன் இயேசுபிரான் அவர்கள் தன் பெயரிலேயே பிரான் என்று இருக்கிறது பிரான் என்றாலே உயர்ந்தவன், குரு , ஆசிரியன் என்று பொருள் கீதை உறைத்த
கண்ணபிறானும் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்வது போல உலகிற்கே வழி காட்டினான் தர்மத்தை ஊட்டினான் அவனும்ஒரு ஆசிரியன்தான் அன்போடு தருதல் ஆயின் அது கருப்பட்டி யாயினும் அதுவே தமக்குகந்தது என்று நிரூபித்த உங்கள் ஆசிரியனும்
ஆசிரியர் என்று இருப்பவர்கள் யாவருமே உலக நன்மைக்காகவும் தன் மாணாக்கர்களின் நன்மைக்காகவும் தன்னலமிலாது வாழ்ந்தவர்கள் அதனால்தான் இறைவன் என்னும் ஸ்தானத்தை எழுத்தறிவித்து அவர்களால் பெற முடிகிறது

No comments: