Lord Murugan-The Tamil GOD
சித்தருக்கெல்லாம் சித்தன்,பழனி ஒரு உன்னதமான திருத்தலம், வைனவத்திற்க்கு ஒரு பதி திருப்பதி என்றால், சைவர்களுக்கு ஒரு ஞானப்பழம் நீ பழனி,திண்டுக்கல் மற்றும் சேலத்திற்க்கு செல்லும் வழியில் ஒட்டன் சத்திரம் என்னும் பேரூருக்கு அருகே பக்திதலமாக விளங்கும் பழனி. இதற்க்கு திருஆவினங்குடி என்றும் பெயருண்டு, மேற்க்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் உள்ள சிறு குன்று குண்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருப்பான் என்ற வாக்கிற்கேற்ப்ப இக் குன்றத்தில் குமரனிருக்கு அழகே அழகு .ஆம் அனைத்தும் துறந்த கோலத்தில் ஆண்டியாக காட்சி அளிப்பவன். சித்தர்களெக்கேல்லாம் சித்தர்களாக விளங்குபவன்.பரம் பொருளான அவனின் தந்தை பரமனிருக்க, வையத்தின் சக்தியாக உருவமெடுத்து தாயவள் சக்தி இருக்க , மாமனோ தருமத்தின் தலைவனாக மாமியோ செல்வத்தின் அருவாக, குருவிற்க்கே குருவாக திகழும் குமரகுருபரனின் குருவாக வந்த பிரம்மனும் கலவானிக்கே தமிழை தந்தருளிய முருகனை ஏன் சித்தர்கள் தலைவனாக ஏற்றார்கள். அதுவும் பழனி முருகனை ஆம் அவனின் அனைத்தும் துறந்த ஆண்டி கோலமா, இல்லை பௌதீகத்தில் ஒரு பொருள் உண்டு அதாவது ஒன்றுமில்லா பொருளில் இருந்துதான் பிரபஞ்சம் தோன்றியது என்று ஐயா Jayabharathan, B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada கூட சொல்லுவார் ஒளிப்பகுதி 25 % ஆனால் நாம் ஒன்றுமில்லை என்று சொல்லும் கரும் பகுதி 75 % அங்கிருந்துதான் இந்த ஒளிப்பகுதி பிறந்தது என்று. சந்தேகமிருந்தால் விண்ணை இரவு நேரத்தில் பாருங்கள் புள்ளி புள்ளியாக விண்மீண்கள் கருமை திறையில் பதித்து வைத்தவைரங்கள் போல்நமது பார்வை செல்லும் இடமெல்லாம் கருமை, ஆனால் அந்த கருமைதான் ஒளிமைக்கு ஆதாரம். அதுபோல் ஒன்றுமில்லாதவன் போல் கையில் தடியுடன், இடையில் சிறுதுணி(கோவணம்) அனிந்து காட்சி அளிப்பவன். ஆனால் அவனிடத்தில் தான் அனைத்தும் அடக்கம், இதை தனது ஞானத்தால் உணர்ந்த சித்தர்கள் அவனை தலைவனாக கொண்டனர்.மூடநம்பிக்கையின் விளைவாக திகழும் பலர் சொல்வதுண்டு முருகனின் படம் வீட்டில் இருந்தால் அது கஷ்டத்தை கொடுக்கும் என்று சிரிப்பு வருகிறது அவர்களின் அறியாமையை என்னி. ஆம், யாமிருக்க பயமேன் என்று ஒரு வார்த்தை போதுமே மொத்த கீதைக்கு சமம்.நேர்மையாக வாழ் சோதனைவந்தால் கலங்காதே நானிருக்க ஏன் கலக்கம் என்ற பொருளை யாமிருக்க பயமேன் என தமிழ் உரைத்த பரமனின் பாலகன், அந்த பரமனுக்கு குருவான சுப்பையன்,பல ஆலயங்களில் தல விருட்சம் அந்த ஆலயத்தில் உறையும் இறைவனின் இஷ்ட பொருளாக தரும் உதாரனத்திற்க்கு வில்வமரம் சிவனுக்கு பிடித்து அதனால் அவனின் ஆலயத்தில் தலவிருட்சம் அது ஒரு மருந்துவ குணமுள்ள இலை என்று சொல்லாம் பழனியின் தல விருட்சம் நெல்லிக்கனி மரம்.ஆம் மனிதன் நோய் நொடியின்றி நீண்ட நாள் வாழ நமக்கு ஒரு அருமருந்து நெல்லிக்கனி அதுமட்டுமா உள்ளதை உள்ள படி காட்டும் குணம் அந்த நெல்லிக்கனிக்கு அது பசுமையாக இருக்கும் பொழுது அதனுள் உள்ள கடின விதை ஓடும் பசுமை நிறமாக இருக்கும். வெளிர்மஞ்சள் நிறமாக இருக்கும் போது உள்ளும் அதே வண்ணம் தான் ஆதாவது உள்ளொன்று புறமொன்று வைக்காதே, உன் உள்ளம் தூய்மையாய் இருக்கும் போது, அகமும் தூய்மையடையும் என்ற தத்துவத்தை சொல்லிச்சென்ற சுப்பிரமணியன் தனக்கு தேர்ந்தெடுத்த தல விருட்சத்தின் மகிமை.அது மட்டுமா கடம்பனே ஒரு பாஷனம் என்பது போல் அவது திரூஉருவ மேனியை நவபாஷனத்தால் செய்து வைத்தார்கள். அவன் மேனியில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சே நமக்கு பல வேதனைகளை தீர்த்து அது மனரீதியாகவும் சரி உடல் ரீதியாகவும் சரி தீபாராதனையில் ஒளிரும் அந்த கள்ளனின் அழகில் ஏப்பேற்பட்ட நாத்திகரும் அடங்கிபோவர்.உலகில் பல மொழிகள் உள்ளன, ஆனால் அந்த மொழிக்கேல்லாம் கடவுளுன்டா வட இந்தியர் அதிகம் பேசும் மொழியான ஹிந்தி அதற்க்கு இராமரையோ, அல்லது மகேஸ்வரனையோ இவர் ஹிந்தி கடவுள், இவர் சமஸ்கிருத கடவுள், இவர் மராட்டி கடவுள் என்று யாராவது சொல்ல கேள்வி பட்டிருக்கிறீர்களா?? ஆனால் தீந்தமிழுக்கேன்ற ஒரே உரிமை கொண்டவன். சரவணன் ஆம் பிரணவ மந்திரத்தின் ஆழம் அறிந்தவன் அதனால்தான் ஓன் நமோ நாராயனா, ஓம் மகேஸ்வரா என்று சொல்வதை விட ஓம் ச ர வ ண பவா என்று சொல்லும் போது அதன் உன்னதம் விளங்கும்.சிவன் உருத்திராட்சைக்குள் அடங்கி விடுவான். ஆனல் இவன் தமிழர்களின் மனமென்னும் ஆலயத்தில் மட்டும் அடங்குவான். என்னை கான வேண்டுமா கொஞ்சம் சிரமபடுங்கள், பனிபடர் மலை கடக்க வேண்டாம்.சிறு குன்றிலிருபேன் நான் என்கிறான் குமரன். குன்றிருக்கும் இடமெல்லாம் அவனிருக்கும் அழகு .தமிழென்றால் குகன், குகனென்றால் தமிழ் என்று சொல்லும் அளவிற்க்கு தமிழரசனாவன்.தமிழர்கள் எந்த மதமானாலும் தமிழ்க்கடவுள் முருகன் என்று தைரியமாக சொல்லாம். தைப்பூச திருநாளின் அந்த கந்த வேலின் புகழ் பாடி அவனது அருள் பெறுவோம்.அவன் வெறும் கடவுள்ள தமிழ்கடவுள், முற்றிலும் துறந்த ஆண்டிதான் ஆனால் அனைத்தும் தன்னுள் அடக்கிய ஆலன், அவன் சித்தனல்ல சித்தர்களுக்கேல்லாம் சித்தன்,
No comments:
Post a Comment